Archive for பிப்ரவரி 22, 2010
பிஸி பேளேபாத்.
இதை எளிய முறையில் தயாரிக்கலாம். வாயால்
சுலபமாகச் சொல்வதானால் அரிசி பருப்பு மற்றும்
காய்களை ஒன்றாக க் குக்கரில் வேக வைத்துக்
கொண்டு கெட்டியான புளித் தண்ணீர சேர்த்து
அரைத்து வைத்துள்ள பொடியையும் உப்பையும்
சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் நெய் சேர்த்து
கடுகு, முந்திரி வகையராவைத் தாளித்து, சுடச்சுட
சாப்பிடலாம் என்று சொல்லி விடலாம். நாம் சற்று
விரிவாகப் பார்க்கலாமா—–
வேண்டியவைகள்-——மெல்லிய ரகமான அரிசி-ஒருகப்
துவரம் பருப்பு—–அரை கப்
வறுத்தறைக்க சாமான்கள்
மிளகாய் வற்றல்—மூன்று
தனியா–ஒண்ணரை டீஸ்பூன்
கடலைப் பருப்பு—இரண்டு டீஸ்பூன்
வெந்தயம்—-கால் டீஸ்பூன்
கசகசா—-இரண்டு டீஸ்பூன்
கொப்பரைத் துருவல்—5 அல்லது6 டீஸ்பூன்
மேற் கண்டவைகளைக் கொப்பரை நீங்கலாகச்
சிறிது எண்ணெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.
ஆறிய பின் கொப்பரை சேர்த்து மிக்ஸியில்
பொடித்துக் கொள்ளவும்.
வேண்டிய காயகள். சின்ன வெங்காயம்
உறித்தது ஒருகப், பச்சைப்பட்டாணி்அரைகப்
நீளமாக நறுக்கிய காரட் அரைகப்
நீளமாக நறுக்கிய நூல்கோல் அரைகப்
நறுக்கிய பீன்ஸ் அரைகப்
ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை
ஊறவைத்து அரை கப்பிற்கு மேல்சாறு
எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க நல்லெண்ணெய், நெய் வகைக்கு
இரண்டு டேபிள் ஸ்பூன்,
கடுகு சிறிது, முந்திரிப் பருப்பு 10
செய்முறை——-குக்கரில் சிறிது எண்ணெயைக்
காயவைத்து வெங்காயத்தைவதக்கிக் கொண்டு
அரிசி பருப்பைக் களைந்து 4 கப்பிற்கு மேல்
தண்ணீருடன் காய் கறிகளைச் சேர்த்து சிறிது
மஞ்சள்ப் பொடியுடன் ப்ரஷர் குக்கரில்குழைய
வேக வைக்கவும்.
பிரஷர் போனபின் நன்றாகக் கிளறி புளித் தண்ணீறைச்
சேர்த் துக் கொதிக்க வைக்கவும்.
வறுத்தரைத்தப் பொடியையும் உப்பையும் சேர்க்கவும்.
மிகுந்த எண்ணெய்,நெய்யில்கடுகைத் தாளித்து
உடைத்த முந்திரியை வறுத்துப் போட்டு
பச்சைக் கொத்தமல்லி சேர்த்து நிதான தீயில்
வைத்து இறக்கவும். கரம் மஸாலா சேர்க்க
வேண்டுமாயினும் பொடியுடன் சிறிது சேர்க்கவும்.
மிகவும் கெட்டியாக இராமல் சற்று நெகிழ்ச்சியாகத்
தண்ணீர் சேர்த்துத் தயாரித்தால் ருசியாக இருக்கும்.
பூந்திப் பச்சடி, வறுவல்களுடன் ஏற்ற ஜோடி.
காய்கள் அவரவர்கள் சாய்ஸில் சேர்க்கலாம்.
காரமும் அப்படியே.மிளகாய் கூட்டிக் குறைக்கவும்.