Archive for ஜனவரி 30, 2010
கொட்டு ரஸம்.
இதுவும் ஒரு அவஸர ரஸம்தான்
வேண்டியவை—-புளி—-ஒரு பெரிய நெல்லிக்காயளவு.
பழுத்த தக்காளி -மூன்று
ரஸப்பொடி—ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு–மூன்று டீஸ்பூன்- சிறிது ஜலத்தில் ஊறவைக்கவும்.
ருசிக்கு உப்பு
தாளிக்க—-கடுகு, பெருங்காயம், ஒரு டீஸ்பூன் நெய்
வாஸனைக்கு—–கொத்தமல்லி, கறி வேப்பிலை.
செய்முறை—–புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்து
சாற்றை எடுக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, ரஸப்பொடி,ஊறின
பருப்பையும் சேர்த்து புளி ஜலத்தைக், குறைவான
தீயில் கொதிக்க விடவும்.
ரஸம் சுண்டியதும், மூன்று கப் ஜலம் சேர்த்துக்
கொதிக்க வைத்து இறக்கி நெய்யில் கடுகு,
, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி, கறிவேப்பிலை
சேர்த்து உபயோகிக்கவும்.