Archive for ஜனவரி 22, 2010
எலுமிச்சை ரஸம்
வேண்டியவைகள்————கால்கப் துவரம் பருப்பு,—–எலுமிச்சம் பழம்-ஒன்று.
பச்சை மிளகாய்——–இரண்டு
காப்ஸிகம் துண்டுகள் —இருந்தால் சிறிதளவு
தனியா——ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு அரை டீஸ்பூன்
மிளகு—–கால் டீஸ்பூன்
தக்காளிப் பழம் பெரியதாக ஒன்று
நெய்–இரண்டு டீஸ்பூன்
விருப்பப்பட்டால்——பூண்டு இதழ்கள் 5அல்லது 6
ருசிக்கு உப்பு, மஞ்சள்ப் பொடி சிறிது
தாளிக்க—-கடுகு, பெருங்காயம் சிறிது
வாஸனைக்கு– கொத்தமல்லி, கறிவேப்பிலை
செய்முறை.—துவரம் பருப்பைக் களைந்து, மஞ்சள் பொடி சேர்த்து
தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
சிறிது நெய்யில் மிளகு தனியா கடலைப் பருப்பை வறுத்து
சீரகத்தைச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, துளி நெய்யில்
நன்றாக வதக்கி, இரண்டுகப் தண்ணீர் சேர்த்து, தக்காளியை
நறுக்கிப் போட்டு, பொடித்தபொடி,உப்பு பெருங்காயம் சேர்த்து
நிதான தீயில் நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
ரஸம் சற்றுக் குறுகியதும் வெந்த பருப்பில் மூன்றுகப்
தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொட்டி நுறைத்துப் பொங்கும்
சமயம் இறக்கி வைத்து கடுகைத் தாளிக்கவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து எலுமிச்சைச் சாற்றைச்
சேர்க்கவும்.
காரம் அதிகம் வேண்டுமாயின் முழு மிளகாயை
தாளிப்பில் சேர்க்கவும்.
பூண்டு சேர்ப்பதாயின் விழுதை தாளிக்கும் போதோ
கொதிக்கும் போதோ நெய்யில் வதக்கிச். சேர்க்கவும்.
ருசிக்கேற்ப புளிப்பு, காரம் கூட்டிக் குறைக்கவும்
காப்ஸிகம் கொதிக்கும் போது சேர்க்கலாம்.