Archive for ஜனவரி 29, 2010
ஜீராரஸம்.
இது சீக்கிரமாக செய்யக் கூடிய ரஸம். ரஸப்பொடி
செய்து வைத்திருப்பதை உபயோகித்துசெய்ய வேண்டும்.
வேண்டியவை—-புளி -ஒரு நெல்லிக்காயளவு,
திட்டமான தக்காளிப் பழம் இரண்டு
ரஸப்பொடி——ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு—–மூன்று டீஸ்பூன்.
சீரகம்——-ஒரு டீஸ்பூன்.
ருசிக்கு—– உப்பு
தாளிக்க——ஒருஸ்பூன் நெய், சிறிது கடுகு, பெருங்காயம்
வாஸனைக்கு——-கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை——சற்று வேகவைத்த தக்காளி,புளியை
இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைத்து சக்கை நீக்கவும்.
துவரம் பருப்பையும், சீரகத்தையும் சிறிது தண்ணீரில்
முன்னதாகவே ஊற வைக்கவும்.
திட்டமான உப்பும் ரஸப்பொடியும் சேர்த்து நிதான
தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.
ஊற வைத்த பருப்பை தண்ணீரை வடிக்கட்டி விட்டு
மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
கொதிக்கும் ரஸத்தில், அரைத்த விழுதில் இரண்டுகப்
ஜலம் சேர்த்து கரைத்து விடவும்.
நுரைத்துப் பொங்கும் சமயம் இறக்கி நெய்யில்
கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை,கொத்தமல்லி
சேர்க்கவும். ருசிக்குத் தக்கபடி ஜலம் கூட்டிக் குறைக்கவும்.
அவசரத்திற்கு ஒரு துவையலும், ரஸமுமாக சமையல்
எளிதாக முடிக்கலாம். விருப்பப் பட்டவர்கள் பருப்புடன்
நான்கு இதழ் பூண்டும் வதக்கி வைத்து அரைக்கலாம்.