Archive for செப்ரெம்பர் 30, 2016
நவரத்ன ஸ்தோத்ரமாலை
நவராத்திரியில் எளிதாக ஸ்தோத்திரம் செய்ய உகந்த தமிழ்த் துதி இது. அகத்தியர் அருளிச் செய்தது. நவராத்ரி,குத்து விளக்கு பூஜை, வாரா வாரம் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் என எல்லா ஸமயங்களிலும் சேர்ந்து சொல்லியது. டில்லியிலிருக்கும்போது இவைகள் மனதிற்குகந்ததாக இருந்தவற்றின் ஞாபகம் வருகிறது. நீங்களும் பாடிப் பயனடையுங்கள்.
1 ஞானகணேசா சரணம் சரணம் ஞானஸ்கந்தா சரணம்சரணம்,
ஞானசத்குரோ சரணம் சரணம், ஞானானந்தா சரணம்சரணம்.
ஆக்கும் தொழில் ஐந்தரநாற்றநலம், பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்,
சேர்க்கும் நவரத்தின மாலையினை, காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைரம்
2. கற்றும் தெளியார் காடே கதியாம், கண்மூடிநெடுங்கின வான தவம்
பெற்றும் தெளியார் நினைப் பென்னில் அவம், பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வைர படைவாள் வைரப், பகைவர்க்கு யமனாக எடுத்தவனே,
வற்றாத அருட்சுனையே வருவாய். மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
நீலம்
3. மூலக்கனலே சரணம்சரணம் , முடியா முதலே சரணம்சரணம்,
கோலக்கிளியே சரணம்சரணம், குன்றாத ஒளிக் குவையே சரணம்.,
நீலத்திருமேனியிலே நினைவாய், நினைவற்றறியேன் நின்றாய் அருள்வாய்,
வாலைக்குமரி வருவாய்வருவாய் , மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
முத்து.
4. முத்தே வரும் முத்தொழில் ஆற்றிடவே, முன்னின்று அருளும் முதல்வி சரணம்,
வித்தே விளைவே சரணம்சரணம், வேதாந்த நிவாஸினியே சரணம் சரணம்,
தத்தேரியநான் தனயன் தாய்நீ , சாகாதவரம் தரவே வருவாய்,.
மத்தேறுத் திக்கினை வாழ்வடையேன், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பவழம்.
5. அந்திமயங்கிய வான விதானம் ,அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை,
சிந்தை நிரம்பவழம் பொழிவாரோ , தேம்பொழிலாம் இது செய்தவள் யாரோ,
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள், எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுத்தாள்,
மந்திர வேத மாயப் பொருள் ஆனாள், மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!
மாணிக்கம்.
6. காணக்கிடையா கதியானவளே, கருதக்கிடையா கலையானவளே,,
பூணக்கிடையா பொலிவானவளே,, புனையக்கிடையா புதுமைத்தவளே,
நாணித் திருநாமமும் நின் துதியும், நவிலாதவரை நாடாதவளே,
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மரகதம்.
7. மரகதவடிவே சரணம் சரணம் ,மதுரித பதமே சரணம்சரணம்,
சுரபதி பணிய திகழ்வாய் சரணம், சுருதிஜதிலயமே இசையேசரணம்,
அரஹர சிவ என்றடியார் குழுவ, அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம், மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
கோமேதகம்.
8. பூமேவியநான் புரியும் செயல்கள், பொன்றாதுபயன் குன்றா வரமும்,
தீமேல் எனினும் ஜெய சக்தி எனத், திடமாய் அடியேன் மொழியும் திறனும்,
கோமேதகமே குளிர்வான் நிலவே , குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்,
மாமேருவினிலே வளர் கோகிலமே, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
பதுமராகம்.
9. ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும, ராக விலாஸினி வியாபினி அம்மா
சஞ்ஜலரோக நிவாரணி வாணி, சாம்பவி சந்ர கலாதரி ராணி,
அஞ்ஜன மேனி அலங்ருத பூரணி, அம்ருதஸ்வ ரூபிணி நித்ய கல்யாணி,
மஞ்சுளமேரு சிருங்க நிவாஸினி, மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
வைடூரியம்.
10…வலையொத்தவினை கலையொத்தமனம், மருளப் பறையாரொலி யொத்தவிதால்,
நிலையற்றொளியேன் முடியத் தகுமோ, நிகளம் துகளாக வரம் தருவாய்,.
அலையற் றசைவற் றனுபூதி பெரும் , அடியார் முடிவாழ் வைடூரியமே,
மலையத்துவஜன் மகளே வருவாய், மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
11. பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா, நவரத்தின மாலை நவின்றிடுவார்,
அவர் அற்புத சக்தி எல்லாமடைவார், சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே,
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே ,மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே மாதாஜெயஓம் லலிதாம்பிகையே!!!!!!!
பின் குறிப்பு—- எழுத்துப் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. தெரிந்தவர்கள் திருத்திக் கொள்ளவும்.
நவ ராத்திரி சுப ராத்ரிகளாக அமைய எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லுகிறேன்.