Archive for செப்ரெம்பர் 4, 2016
குட்டி கணபதி அம்மை,அப்பனுடன்
ஸ்ரீகிருஷ்ணபகவானை குழந்தையிலிருந்து பலவித வளர்ச்சியில் பார்ப்போம். முதுமை என்பதை அவரிடம் எப்போதும் பார்க்கவில்லை. மஹா பாரத யுத்தத்தின்போது அவருக்கு ஏராளமான பேரன்களிருந்தார்கள். அவர் என்னவோ இளமையுடன்தானிருந்தார். அதுபோல
ஸ்ரீகணேசரும் ஊர்,உலகம்,ஆறு,குளம்,மரம் வீடு,காடு எங்கு வீற்றிருந்தாலும் இளமையுடன்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். தாத்தா கணேசரைப் பார்க்கவில்லை. தாய் பார்வதியுடனும்,திரிசூலதாரி,கங்காதாரி சிவனுடனும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பது போன்ற இச் சித்திரம் யாவரையும் மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். வினாயக சதுர்த்தி வாழ்த்துகளுடன் அன்புடனும். காமாட்சி