Archive for ஒக்ரோபர் 4, 2009
மோர்க்குழம்பு. morkkuzampu
வேண்டியவை அதிக புளிப்பில்லாத கெட்டியான மோர் 3கப்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்.——–சுவைக்குஉப்பு
அரைக்க—பச்சை மிளகாய் 3——–சீரகம்ஒரு டீஸ்பூன்—
கடலைப் பருப்பு இரண்டு டீஸ்பூன்.–தனியா இரண்டு டீஸ்பூன்
இஞ்சி அரை அங்குலத் துண்டு. —-தேங்காய்த் துருவல் 4டேபிள்ஸ்பூன்
தாளிக்க——கடுகு அரைடீஸ்பூன்——–வெந்தயம்கால் டீஸ்பூன்,——–வத்தல் மிளகாய் ஒன்று
பெருங்காயம் சிறிது,———நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.
கறிவேப்பிலை சிறிதளவு.
காய்——பூசணி. பறங்கி. சௌ,சௌ கீரைத்தண்டு, சேனை முதலானவைகளானால் சிறிய
துண்டங்களாக 3 கப் அளவிற்கு ஏதாவதொன்றை நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை தண்ணீரில் அலம்பி ,ஊறவைத்து ,தேங்காய் .
இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் துவையல் மாதிரி அரைத்தெடுக்கவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய காயைசிறிது உப்பு சேர்த்து நீரில் வேக விடவும்.
தண்ணீர் அதிக மிருந்தால் வடித்து விடவும்.
மோரில் அரைத்த கலவை, உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து நனறாகக் கரைத்து வெந்த காயில்
கொட்டி பால் பொங்குவதுபோல் குழம்பு நுரைத்து பொங்கி மேலெழும் வரை கிளறி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும் எண்ணெயில் தாளிக்க வேண்டியதைத் தாளித்து
கறிவேப்பிலையையும் குழம்பில் சேர்க்கவும்.
குடமிளகாய், வெண்டைக்காய். போடுவதாக இருந்தால் எண்ணெயில் வதக்கி சேர்க்கலாம்.
காய்களுக்குப்பதில் சிறிது கடலைமாவில் லேசான உப்பு காரம் சேர்த்து தளர தண்ணீர்
விட்டுப் பிசைந்து காயும் எண்ணெயில் பகோடாக்களாகப் பொரித்தும் கொதிக்கும் குழம்பில் போட்டு இறக்கி மூடி வைக்கலாம்.
அடுத்து வேறு விதமான மோர்க் குழம்புகளைப் பார்க்கலாம்.