Archive for ஒக்ரோபர் 28, 2009
காய்கறி புலவு.VEGETABLE PULAVU
வேண்டியவை—-பாஸ்மதி அரிசி–2கப்
வேண்டிய காய்கறிகள—–தோல்நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு ஒருகப்,——–காரட் ஒருகப். வெங்காயம் ஒருகப் காலிபிளவர் ஒரு கப், பச்சைமிளகாய்மூன்று.
பொடிக்க——-லவங்கம்8—மிளகுஒரு டீஸ்பூன்,-பட்டை1அங்குல அளவு, ஏலக்காய்1. இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
தாளிக்க—–ஜீரகம் ஒரு டீஸ்பூன்,—-பிரிஞ்சி இலை ஒன்று,
இஞ்சி, பூண்டு விழுது தலா ஒரு டீஸ்பூன்,மஞ்சள்பொடி அரை டீஸ்பூன். எண்ணெய்2டேபிள் ஸ்பூன், நெய்3டேபிள் ஸ்பூன்.
ருசிக்கு வேண்டிய உப்பு.
செய்முறை——-அரிசியைக் களைந்து வடிக்கட்டி நிதானமான தீயில் , வாணலியில் இரண்டு ஸபூன் நெய்யை விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்யும், நெய்யுமாக விட்டு, ஜீரகத்தைத் தாளித்து, வெங்காயம் மிளகாய் ,இஞ்சி,பூண்டுசேர்த்து வதக்கவும். வதங்கியவுடன், காய்கறிகளையும் சேர்த்து லேசாக வதக்கி மஸாலாபொடி மஞ்சள் உப்பு, பிரிஞ்சிஇலை, வருத்த அரிசி, மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து நிதானமான தீயில் வெயிட் போட்டு ஒரு விஸில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
அவரவர்கள் குக்கரில் அரிசி வேக எவ்வளவு விஸில் என கணக்குத் தெரியும். அதன் பிரகாரம் செய்யவும். தக்காளிப் பச்சடியுடன் பறிமாறலாம் வெங்காயம் ஸாம்பார் வெங்காயமாகச் சேர்த்தால், புலவு ருசியாக இருக்கும்.
பூந்தி boondhi
வேண்டியவை—–ஒருகப் கடலைமாவு
கால்கப் அரிசிமாவு, கேஸரி கலர் ஒருதுளி
ருசிக்கு உப்பு, கால் டீஸ்பூனிலும் பாதியளவு சமையல் ஸோடா இவைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
செய்முறை——–மாவுக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
குழிவான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பூந்தி தேய்க்கும் கரண்டியில் [உபகரணத்தில்] முக்கால் கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் தூக்கலாக கரண்டியைப் பிடித்துக்கொண்டு, குழிக்கரண்டியின் அடிப் பாகத்தினால் மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும். கிளறி விட்டு சல்லிக் கரண்டியினால் பூந்தியை எடுத்து வடிக்கட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். இப்படியே மிகுதி மாவையும் பூந்திகளாகத் தயாரிக்கவும்.
கரகர என்ற பதத்தில் வேகவிட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி, வேர்க்கடலை முதலானவற்றுடன், உப்பு ,காரம், காயம் பொடிகள் சேர்த்து பூந்தியைக் கலந்து கொடுக்கலாம்.
தயிர்ப் பச்சடி செய்யவும் பூந்தியை உபயோகிக்கலாம். மிக்சர் செய்யவும் உபயோகமாகும்.
லட்டு செய்ய தனி கடலைமாவில் பூந்தி செய்ய வேண்டும். அதைப் பிறகு எழுதுகிரேன்.