Archive for ஒக்ரோபர் 8, 2009
முள்ளுத் தேன் குழல்
வேண்டியவை—–வறுத்துப் பொடிக்க——-பயத்தம்பருப்பு——1கப்
கடலைப் பருப்பு கால்கப்,———-உளுத்தமபருப்பு 1டேபிள்ஸ்பூன் இவைகளை
வாணலியிலிட்டு லேசாக வறுத்துக் கொண்டு மிக்ஸியில் இட்டு பொடித்து சலித்துக் கொள்ளவும். அதிகம் செய்வதானால் மிஷினில் அரைத்துக் கொள்ளலாம்.
இம்மாவை அளந்து இதைப்போல் 2பங்கு அரிசி மாவைக்கலந்து கொள்ளவும்.
மாவுடன் கலக்க——ருசிக்கு உப்பு,—— வெண்ணெய்இரண்டு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் 1டீஸ்பூன்,—-வெள்ளைஎள் 1டீஸ்பூன், பெருங்காயப் பொடி சிறிது.
செய்முறை——– மாவுடன் உப்பைத் தவிர எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலக்கவும். மாவை இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்.ஒவ்வொரு பாகமாக உப்பு ஜலம்சேர்த்துப் பிசையலாம். முருக்கு சிவக்காமல் இருக்கும். வேண்டிய எண்ணெய் தயார் செய்து கொள்ளவும்.
மாவை கெட்டியாகவும், சற்றுத் தளர்வாக முறுக்கு பிழியும் பக்குவத்திர்குப்பிசைந்து கொள்ளவும்.
அதிகப் பருமனில்லாத முள்ளுத் தேன் குழல் அச்சில் உட் புறம் எண்ணெய் தடவி மாவை இட்டு , எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் பிழிந்துஎடுக்கவும்.
இம்முறுக்கு கலர் நன்றாக இருக்கும். வாய்க்கும் ருசியாக இருக்கும்.

முள்ளுத் தேன்குழல்
நீர்த்த மோர்க் குழம்பு.
வேண்டியவை——–கடைந்தமோர் 3கப்.
மிளகு——-1டீஸ்பூன்,———லவங்கம்8
ஓமம்—-1டீஸ்பூன்,——— மிளகாய் வற்றல்1.
வெந்தியம் அரை டீஸ்பூன்,——–நசுக்கிய இஞ்சி சிறிது
ருசிக்கு உப்பு,——-கடலைமாவு 1டீஸ்பூன்,—துளி மஞ்சள்பொடி
கறிவேப்பிலை சிறிதளவு. தாளிக்க எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய் முறை —- மோரில் கடலைமாவு, உப்பு, மஞ்சள், இஞ்சியைக் கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து, ஓமத்தை வெடிக்க விட்டு எல்லா சாமான்களையும்
போட்டு வறுத்து கரைத்த மோரில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
உடல் நலமில்லாது சுமாராகும் சமயம் கிச்சடியுடன் சேர்த்துசாப்பிட வாய்க்கு
ருசியான ஆரோக்கியமான குழம்பு இது. ரஸமாகவும் கொள்ளலாம்.
தனியாப் பொடியும் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.
———–