Archive for ஒக்ரோபர், 2009
கடலைமாவின் ரிப்பன் பகோடா

கடலைமாவின் ரிப்பன் பகோடா
வேண்டியவைகள்
—–1கப் அரிசிமாவு.
கடலைமாவு——2கப்,——பெருங்காயப் பொடிகால் டீஸ்பூன்
4 டீஸ்பூன் வெண்ணெய்,———ஒனறரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
ருசிக்கு உப்பு,—–பொரிக்க எண்ணெய்,——-எள், அல்லது கசகசா 1 ஸபூன்
செய் முறை.—-இரண்டு மாவுகளையும் காரம், காயம், வெண்ணெய், கசகசா சேர்த்து, நன்றாகக் கலந்து 2பங்காகப் பிரித்துக் கொள்ளவும்.
ஒரு பங்கு மாவை வேண்டிய உப்பு ஜலம் சேர்த்து மென்மையாகவும் நனறாகவும், பிசைந்து கொள்ளவும். சிறிது தேங்காய்ப் பால் சேர்த்தும் பிசையலாம். மீதி மாவையும் இப்படியே உபயோகிக்கவும்.
ரிப்பன் அச்சு போடப்பட்ட குழலில் உள்ளே எண்ணெயைத் தடவி பிசைந்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, வாணலியில்காயும் எண்ணெயில் ரிப்பனைப் பிழிந்து ,திருப்பிப் போட்டும் வேகவைத்து ,கரகரப்பான பதத்தில் எடுத்து வடிய வைத்து உபயோகிக்கவும்.
மாவைக கொ்ஞ்சமாகப் பிசைவது சிவக்காமலிருக்க உதவும்.
முள்ளுத் தேன் குழல்
வேண்டியவை—–வறுத்துப் பொடிக்க——-பயத்தம்பருப்பு——1கப்
கடலைப் பருப்பு கால்கப்,———-உளுத்தமபருப்பு 1டேபிள்ஸ்பூன் இவைகளை
வாணலியிலிட்டு லேசாக வறுத்துக் கொண்டு மிக்ஸியில் இட்டு பொடித்து சலித்துக் கொள்ளவும். அதிகம் செய்வதானால் மிஷினில் அரைத்துக் கொள்ளலாம்.
இம்மாவை அளந்து இதைப்போல் 2பங்கு அரிசி மாவைக்கலந்து கொள்ளவும்.
மாவுடன் கலக்க——ருசிக்கு உப்பு,—— வெண்ணெய்இரண்டு டேபிள் ஸ்பூன்
ஜீரகம் 1டீஸ்பூன்,—-வெள்ளைஎள் 1டீஸ்பூன், பெருங்காயப் பொடி சிறிது.
செய்முறை——– மாவுடன் உப்பைத் தவிர எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலக்கவும். மாவை இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்.ஒவ்வொரு பாகமாக உப்பு ஜலம்சேர்த்துப் பிசையலாம். முருக்கு சிவக்காமல் இருக்கும். வேண்டிய எண்ணெய் தயார் செய்து கொள்ளவும்.
மாவை கெட்டியாகவும், சற்றுத் தளர்வாக முறுக்கு பிழியும் பக்குவத்திர்குப்பிசைந்து கொள்ளவும்.
அதிகப் பருமனில்லாத முள்ளுத் தேன் குழல் அச்சில் உட் புறம் எண்ணெய் தடவி மாவை இட்டு , எண்ணெயைக் காய வைத்து முறுக்குகளைப் பிழிந்துஎடுக்கவும்.
இம்முறுக்கு கலர் நன்றாக இருக்கும். வாய்க்கும் ருசியாக இருக்கும்.

முள்ளுத் தேன்குழல்
நீர்த்த மோர்க் குழம்பு.
வேண்டியவை——–கடைந்தமோர் 3கப்.
மிளகு——-1டீஸ்பூன்,———லவங்கம்8
ஓமம்—-1டீஸ்பூன்,——— மிளகாய் வற்றல்1.
வெந்தியம் அரை டீஸ்பூன்,——–நசுக்கிய இஞ்சி சிறிது
ருசிக்கு உப்பு,——-கடலைமாவு 1டீஸ்பூன்,—துளி மஞ்சள்பொடி
கறிவேப்பிலை சிறிதளவு. தாளிக்க எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய் முறை —- மோரில் கடலைமாவு, உப்பு, மஞ்சள், இஞ்சியைக் கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து, ஓமத்தை வெடிக்க விட்டு எல்லா சாமான்களையும்
போட்டு வறுத்து கரைத்த மோரில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
உடல் நலமில்லாது சுமாராகும் சமயம் கிச்சடியுடன் சேர்த்துசாப்பிட வாய்க்கு
ருசியான ஆரோக்கியமான குழம்பு இது. ரஸமாகவும் கொள்ளலாம்.
தனியாப் பொடியும் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.
———–
வெந்திய மோர்க் குழம்பு–VENDIYA MORK KUZAMBU
வேண்டியவைகள்–புளிப்பு மோர்-2கப்
வறுக்க வேண்டியவைகள் மிளகாய் வற்றல்- 2,——–தனியா 1டீஸ்பூன்
வெந்தியம்——1டீஸ்பூன்,——–அரிசி 1’டீஸ்பூன்,——-துவரம் பருப்பு 1டீஸ்பூன். இவைகளை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தேங்காய்த் துருவல் 2டேபிள் ஸ்பூன்,——பெருங்காயம் சிறிது.
தாளிக்க—–எண்ணெய், கடுகு அரை டீஸ்பூன்,—–சிறிது மஞ்சள்பொடி,-ருசிக்குஉப்பு,——கறி வேப்பிலை சிறிது.
செய்முறை———வறுத்த சாமான்களுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயம் திட்டமாகச் சேர்த்துமோரில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நிதானதீயில் பால் பொங்கும் பதத்தில், மோர்க் கலவையைக் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கள் விருப்பப்படி சேர்க்கவும். காரமும் அப்படியே.
பருப்புத் துவையல் சாதங்கள், பொடிவகை சாதங்களுடன், சேர்த்துச் சாப்பிடநன்றாக இருக்கும்.
இதையே வறுத்தரைத்த வெந்தயப் பொடி, மிளகாய்ப் பொடி, ஒருடீஸ்பூனகடலைமாவு, பெருங்காயம் உப்பு, முதலியவற்றை புளிப்பு மோரில் கரைத்து தேங்காயெண்ணெயில் கடுகை தாளித்து ஒரு கொதிவிட்டு அவசரத்திற்கும் தயாரிக்கலாம். காய்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை.செய்து பாருங்கள்.
மோர்க்குழம்பு. morkkuzampu
வேண்டியவை அதிக புளிப்பில்லாத கெட்டியான மோர் 3கப்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்.——–சுவைக்குஉப்பு
அரைக்க—பச்சை மிளகாய் 3——–சீரகம்ஒரு டீஸ்பூன்—
கடலைப் பருப்பு இரண்டு டீஸ்பூன்.–தனியா இரண்டு டீஸ்பூன்
இஞ்சி அரை அங்குலத் துண்டு. —-தேங்காய்த் துருவல் 4டேபிள்ஸ்பூன்
தாளிக்க——கடுகு அரைடீஸ்பூன்——–வெந்தயம்கால் டீஸ்பூன்,——–வத்தல் மிளகாய் ஒன்று
பெருங்காயம் சிறிது,———நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.
கறிவேப்பிலை சிறிதளவு.
காய்——பூசணி. பறங்கி. சௌ,சௌ கீரைத்தண்டு, சேனை முதலானவைகளானால் சிறிய
துண்டங்களாக 3 கப் அளவிற்கு ஏதாவதொன்றை நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை தண்ணீரில் அலம்பி ,ஊறவைத்து ,தேங்காய் .
இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் துவையல் மாதிரி அரைத்தெடுக்கவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய காயைசிறிது உப்பு சேர்த்து நீரில் வேக விடவும்.
தண்ணீர் அதிக மிருந்தால் வடித்து விடவும்.
மோரில் அரைத்த கலவை, உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து நனறாகக் கரைத்து வெந்த காயில்
கொட்டி பால் பொங்குவதுபோல் குழம்பு நுரைத்து பொங்கி மேலெழும் வரை கிளறி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும் எண்ணெயில் தாளிக்க வேண்டியதைத் தாளித்து
கறிவேப்பிலையையும் குழம்பில் சேர்க்கவும்.
குடமிளகாய், வெண்டைக்காய். போடுவதாக இருந்தால் எண்ணெயில் வதக்கி சேர்க்கலாம்.
காய்களுக்குப்பதில் சிறிது கடலைமாவில் லேசான உப்பு காரம் சேர்த்து தளர தண்ணீர்
விட்டுப் பிசைந்து காயும் எண்ணெயில் பகோடாக்களாகப் பொரித்தும் கொதிக்கும் குழம்பில் போட்டு இறக்கி மூடி வைக்கலாம்.
அடுத்து வேறு விதமான மோர்க் குழம்புகளைப் பார்க்கலாம்.
