Archive for பிப்ரவரி 3, 2010
பொரித்த ரஸம்.
வேண்டியவை.——அரைகப்—–துவரம் பருப்பு.
ஒரு டீஸ்பூன்——-மிளகு
ஒரு டீஸ்பூன்——-சீரகம்.
இரண்டு டீஸபூன்—நெய்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்-சிறிது
கடுகு—சிறிது
வற்றல் மிளகாய்–ஒன்று
வாஸனைக்கு —பச்சைக் கொத்தமல்லி சிறிது
வேண்டுமானால்—–பூண்டு 5 அல்லது6 இதழ்கள்
செய்முறை——-பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி ,தண்ணீர்
சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகு சீரகத்தைப் பொடித்து ஒரு ஸ்பூன் நெய்யில்
பொரித்து, ஒன்றரைக்கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க
விடவும். பூண்டு வேண்டுமானால் அதையும் வதக்கி
சேர்க்கவும். சற்று கொதித்தபின் வெந்த பருப்பை,
3கப் அளவிற்கு ஜலம் சேர்த்து நன்றாகக் கரைத்து,
உப்பு சேர்த்துக் கொட்டி ஒரு கொதி பொங்க விடவும்.
மீதி நெய்யில் கடுகு, மிளகாய், பெருங்காயத்தைத்
தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
இது பத்தியமான ரஸம்.
எலுமிச்சைச் சாற்றையும் வதக்கிய தக்காளிப்
பழத்தையும் சேர்த்தும் சாப்பிடலாம். ருசிக்கு ஏற்ப
யாவற்றையும் கூட்டிக் குறைத்துக் கொள்ளுங்கள்.
இது எனது மாமூலான வார்த்தை.
