Archive for மார்ச் 28, 2010
.வெந்தயக்கீரை ஸாம்பார்
இது அவரைக்காயும் வெந்தயக்கீரையையும் சேர்த்து
செய்யும் ஸாம்பார். அறைத்து விட்டு செய்யலாம்.
வேண்டியவைகள்
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக்கீரை—-3 கப்
காம்பு நீக்கி இரண்டாக நறுக்கிய அவரைக்காய் 10
பச்சை மிளகாய்—-2
வறுத்தரைக்க—-தனியா -2டீஸ்பூன்
மிளகாய்—4
கடலைப் பருப்பு–1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—அரைகப்
தாளிக்க—-எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்
ருசிக்கு உப்பு
துவரம் பருப்பு—முக்கால் கப். துளி மஞ்சள் பொடி
புளி–1 எலுமிச்சைஅளவு தக்காளிப் பழம் 2
செய்முறை-—–பருப்பைக் களைந்து மஞ்சள் சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
வறுக்கக் கொடுத்த சாமான்களை 1 ஸபூன் எண்ணெயில் சிவக்க
வறுத்து, தேங்காயையும் சேர்த்துப் பிறட்டி இறக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியிலிட்டு சிறிது ஜலம் சேர்த்து அறைத்து
எடுக்கவும்.
புளியைக்கரைத்து 3கப் அளவிற்கு அதிகமாகவே சாறு பிழிந்து
கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம்
தாளித்து ,, பச்சைமிளகாயுடன் அலம்பிய கீரையைப் போட்டு
வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி புளி ஜலத்தைச்
சேர்க்கவும். அவரைக்காய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
காய் வெந்து, புளி வாசனை போன பிறகு அறைத்த விழுதைக்
கரைத்துக் கொட்டி நன்றாக கொதித்தபின். வெந்த பருப்பை
மசித்துச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.
கொதிக்கும்போது அடிக்கடி கிளறி அடி பிடிக்காமல் செய்வது
அவசியம் கீரை அவரைக்காய் ருசி பொருத்தமாக இருக்கும்.
அவசியமானால், பருப்பை அதிகம் சேர்த்து வேகவைக்கவும்.