Archive for மார்ச் 30, 2010
வேப்பம்பூப் பச்சடி.
வேண்டியவைகள்
வேப்பம்பூ——-3 டீஸ்பூன்
புளி—-ஒரு நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய்—-1
வெல்லப் பொடி——–3 டேபில்ஸ்பூன்
உப்பு –சிறிது
தாளிக்க எண்ணெய் —சிறிது
கடுகு—- கால் டீஸ்பூன்,துளி பெருங்காயம்
செய்முறை—-புளியை வென்னீரில் ஊற வைத்து் அரைகப் அளவிற்கு தண்ணீரில்
கெட்டியாகக் கறைத்துக் கொள்ளவும்.
வேப்பம் பூவை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடிக்கவும்.
காய்ந்த பூவாக இருந்தால் துளி நெய்விட்டு வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, பெருங்காயம் தாளித்துக்
கீறின பச்சை மிளகாயை வதக்கி, புளி ஜலத்தைச் சேர்க்கவும்.
உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். ஜாம் பதத்தில்
சுண்டி வரும் போது இறக்கி வைத்து வேப்பம் பூப்பொடியைச்
சேர்க்கவும். இஞ்சியும் சேர்க்கலாம். தமிழ் வருஷப்பிறப்பிற்கு
இந்தப் பச்சடி கட்டாயம் செய்வது வழக்கமாக இருந்தது.
பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகளுக்கெல்லாம் இந்தப் பச்சடி
மிகவும் நல்லது.