Archive for மார்ச் 31, 2010
தக்காளி ஸ்வீட் பச்சடி.
சமீபத்தில் விசேஷத்திற்கு பரிமாறிய சமையலில் ஸ்வீட்பச்சடி
மிகவும் நன்றாக இருந்தது. பச்சடியைப் பற்றி விசாரித்தேன்.மிகவும்
சாதாரண குறிப்புதான். இருந்தாலும் குழந்தைகளும் பெறியவர்களும்
மிகவும் விரும்புவார்களென்று நினைக்கிறேன்.
வேண்டியவைகள்.
பழுத்த தக்காளிப் பழம்——4
சர்க்கரை——5,—6 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி—-கால் டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு—8
உலர்ந்த திராக்ஷை —2 டேபிள்ஸ்பூன்
நெய்—-1 டேபிள் ஸ்பூன்
செய்முறை——–தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கச்சாத பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யில் தக்காளியை லேசாக
வதக்கி, அரை கப் ஜலம் சேர்த்து நன்றாக வேகவிடவும். ஜலம்
வேண்டுமானால் சிறிது அதிகம் சேர்த்து மசிக்கவும்.
சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
நீர்த்துக் கொதித்தபின், திக்காக சேர்ந்து வரும்போது இறக்கி
நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துச் சேர்க்கவும்.
ஏலப்பொடி சேர்த்து உபயோகப்படுத்தவும்.
தக்காளியை நன்றாக மசிப்பது அவசியம். சொன்னால்தான்
தெரியும் தக்காளிப் பச்சடி என்று.